Header Ads

கொம்புமுறி விளை யாட்டு

 மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பாரம்பரிய கொம்பு முறி விளையாட்டின் 2வது விளையாட்டுக் கொம்புமுறி விளை
யாட்டு நேற்று(17) செவ்வாய்க்கிழமை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



முதலைக்குடா ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன் ஆட்டத்துடனும், முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்களின் கோலாட்டத்திடனும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட இரு சேரி கொம்புகளும் முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதற்கான பூசைகள் இடம்பெற்று முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானதத்தில் விமர்ச்சியாக கொம்புமுறி இடம்பெற்றபோதும் இரண்டு சேரியாரினது கொம்புகளும் உடையாது புரி குலைந்ததன் காரணமாக போட்டியின் வெற்றியானது இரு சேரியாருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர் மௌனகுரு, மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வவுணதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் மோகனதாஸ் மற்றும் சிவஸ்ரீ.வ.சோதிலிங்கக் குருக்கள், சிவஸ்ரீ.ப.மானகப்போடி குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இறுதித் தாய்க் கொம்பு முறி நிகழ்வானது எதிர்வரும்(20) வெள்ளிக்கிழமை அதே இடத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்துகள் இல்லை