தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம், கலாசார பேரவை ஆகியன
இணைந்து நடாத்திய கொம்பு முறி நிகழ்வின் இறுதி நிகழ்வான தாய்க்கொம்பு
முறிக்கும் நிகழ்வு இன்று(20) முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு
மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரும், மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து வட சேரி தென் சேரி கொம்புகள் ஏடகத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு வீதி ஊர்வலமாக முதலைக்குடா கண்ணகியம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின்னர் முனைக்காடு கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. அங்கே விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து இரு சேரி கொம்புகளும் உரிய முறையில் பூட்டப்பட்டு அதற்கான அடை கட்டப்பட்ட பின்னர் செவ்வக குத்தி நிறுத்தி அரிப்பு பூட்டப்பட்ட கொம்புகள் இறுதியில் கண்ணகியம்மன் அருளால் முறியாமல் விலத்திசென்றுவிட்டமை வியப்பிற்குரியவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ நடைபெற்ற இவ் விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வசந்தன் கூத்து, காவடி ஆட்டம், கும்மி, குரவை போடுதல், என பல நிகழ்வுகளும் நடைபெற்றன.









Post a Comment