மட்டக்களப்பு முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று அதிகாலை திருக்கதவு திறத்தலுடன்
ஆரம்பமாகியது. முத்தமிழும் சிறந்திலங்க முக்கனியும் விளைந்து வீரமுடன்
கல்வியும் வெகுவாக வளர்ந்து நிற்கும் முனைக்காடு கிராமத்தில்
குடிகொண்டிருக்கும் முத்துமாரியம்மனுக்கு நிகழும் ஜய வருடம் ஆனித்திங்கள்
23ம் நாள் (07.07.2014) திங்கட்கிழமை அதிகாலை திருக்கதவு திறத்தலுடன்
ஆரம்பமாகிய சடங்கு உற்சவம் எதிர்வரும் 12.07.2014 சனிக்கிழமை சர்க்கரை
அமுதுடன் இனிதே நிறைவுற உள்ள இவ்வேளை 2ம் நாளாகிய இன்று மதிய பூசை
மிகச்சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து இன்று இரவினை சிறப்பிக்கும் முகமாக கலை
நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உற்சவ காலங்களில்
கதாப்பிரசங்கங்களும் கலை நிகழ்வுகளும் நடைபெறும் அதேவேளை அன்னதானங்கள்
தொடர்ந்து வழங்கப்படுகிறது.
Post a Comment