Header Ads

நாகசக்தி சிறுவர் கழகத்திற்கு இசைக்கருவிகள் கையளிக்கும் நிகழ்வு

 பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் இசைக்கருவி மற்றும் கலை ஆற்றுகைக்கான உடை ஒப்பனைப் பொருட்கள் முனைக்காடு நாகசக்தி சிறுவர்கழகத்திற்கு வழங்கும் நிகழ்வு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் திரு.இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இன்று(15) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், பிளான் ஸ்ரீலங்கா ஆலோசகர், திட்ட இணைப்பளர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், கிரமசேவை உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் பிரதிநிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







கருத்துகள் இல்லை