தட்டிக் கொடுப்பவர்களாக வாழ வேண்டும்
“தலை குனிந்து நடப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே” என்பது ஆன்றோர் வாக்கு இதன் மூலமாக புலப்படுவது நாம் மற்றவர்களை மதிக்கின்ற, கீழ்படிவு கொண்ட, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்ந்தோமாக இருந்தால் எல்லோராலும் போற்றப்படுகின்ற, சமூகத்தில் மதிக்கப்படுகின்ற ஒருவராக உருவாக முடியும்.
ஒருவர் ஒரு வெற்றியை பெறுவதாக இருந்தால் அவருக்குள் இருக்கின்ற விடாமுயற்சி, ஊக்கம் இவற்றுக்கப்பால் அவருக்கு பின்னால் அவரை உற்சாகப்படுத்துகின்ற, ஊக்கப்படுத்துகின்ற சக்தி ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருந்தால் தான் சாதிக்கமுடியும். இல்லையாயின் சக்தி இழந்து சோம்பறிகளாக மாறிவிடுவோம்.
தோல்வி அடைகின்ற பலரை நாம் அவதானிக்கின்ற போது ஒரு விடயத்தில் தோல்வி அடைந்து விட்டால் அதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும் மாட்டார்கள் ஆனால் எண்ணி எடுக்க கூடிய சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உடைய ஒரு சிலர் மட்டும் எத்தனை தரம் விழுந்தாலும் முயற்சி செய்தே பார்ப்பேன் என்று முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கின்றனர். உதாரணமாக தோமஸ் அல்வா எடிசன் பல தடவை முயற்சி செய்து தான் மின் குமிழை கண்டுபிடித்துள்ளான். அவர் அப்போது ஒரு தடவையுடன் தனது முயற்சியை கைவிட்டிருந்தால் இன்றுநாம் ஒளியைக் கட்டிருக்க முடியாது; அவரை பற்றிபேசி இருக்கவும் முடியாது.
ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான், அவ் வெற்றியை நிலை நாட்டுவதற்கு அவர்களுக்கு பின்னால் உள்ள சக்தி வலுவிழந்து இருக்கின்றது. அதனால் தான் அவ்வெற்றியில் சற்று மாற்றம் ஏற்படுகின்றது. இம்மாற்றத்திற்கு காரணம் நாம் ஒவ்வொருவரும் தான். ஏன் எனின் தோல்வி அடைகின்ற ஒருவரை பார்த்து மீண்டும் முயற்சிசெய்! அதற்கு பின்னால் நாம் இருக்கின்றோம். இது முதல் தடவைதான், இதன்மூலம் ஒரு அனுபவம் கிடைத்திருக்கின்றது. என்று ஆறுதல் வார்த்தைகள் கூறுகின்றவர்களாக இருக்கின்றோமா? என்றால் மிகக்குறைவு இதற்கு மாறாக கிராமபுறங்களில் அதிகமாக பார்த்தால் கல்வியா சரி? விளையாட்டா சரி? மற்ற விடயங்களா சரி? இதற்கு உனக்கு சரிவராது விட்டுத்து வேற வேலையைப் பாரு. என்று கூடாத வார்த்தைகளையும் கூறிதட்டிக் கழிக்கின்றவர்களாக பலர் இருக்கின்றனர். இதனால் சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஆதங்கம் கொண்ட எத்தனையோ சாதனையாளர்கள், இன்று சாதாரண மனிதர்களாக இருக்கின்றனர்.
எம்மக்கள் பலரிடத்தில் இருக்கின்ற ஓர் பண்பு பிறர் உயர்ந்து விடக்கூடாது, அல்லது சாதனை படைத்து விடக்கூடாது, என்கின்ற கீழ்தரமான சிந்தனை. இதற்காக வேண்டி பல கீழ்; தரமான பல செயற்பாடுகளை செய்து மற்றவர்களை கீழ் நிலைக்கு கொண்டுவர சிந்திப்பது, ஆனால் வெளியில் நல்லவர்களாகவும் தங்களை காட்டிக் கொள்வது. ஒருவர் உயர்ந்து கொண்டு சென்றால் அவரை எவ்வாறாவது தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கின்ற மனிதப் பண்பு மிகக்குறைவு இதனால் தாங்களும் உயரவும் மாட்டார்கள்.
ஒருவர் சாதனை படைக்கின்றார் எனின் அல்லது உயர்ச்சி அடைக்கின்றார் எனின் அது எம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வெற்றியாகத்தான் அது இருக்குமே தவிர எவ்விதத்திலும் எம்மை பாதிக்கும் ஒன்றாகாது, ஆனால் மற்றவரை உயரவிடக்கூடாது, சாதிக்க விடக்கூடாது, என்று சிந்திக்கின்ற அதற்காக செயற்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எம்மை அறியாமலே அழிவுக்குள் இட்டுச்செல்லும்.
நவீனத்துவமான உலகில் பணம், பதவி என்று பேராசை பிடித்து உணவு உண்பதற்கு கூட நேரம் இல்லாதவர்களாக பலர் உள்ள போதும் சமூகத்திற்காக சேவை செய்கின்ற மனப்பாங்கு ஒரு சிலருக்குத்தான் உண்டு. ஓர், இரண்டுபேர் சமூகத்திற்காக சேவை செய்யவென்று களமிறங்கினாலும், அவர்களை தட்டிக் கொடுத்து பக்கபலமாய் இருந்து சமூகத்தை ஒன்று சேர்ந்து உயர்த்துவோம் என்று சிந்திக்கின்ற தன்மை கொண்டவர்கள் மிகக்குறைவு, அதைவிட்டு எவ்வாறு இவர்களை குறை கூறுவது, பிழை பிடிப்பது, என்று நினைக்கின்ற சமூகமே உண்டு. இச்சமூக சேவை யாருக்காக செய்யப்படுகின்றது? ஏன் செய்யப்படுகின்றது, இதனால் எமக்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பது பற்றிய எவ்வித சிந்தனையும் இருக்காது. ஒரே சிந்தனை சிறப்பாக வேலை செய்கின்றனர், கெட்டிக்காரர்கள் என்று ஒரு சில நல்லவர்கள் பேசினால் போதும் இவர்களை எவ்வாறாவது வீழ்த்த வேண்டும் என்று சிந்திக்கின்றவர்களே இம்மண்ணில் பலர் உளர். இதனை எமது மொழி நடையில் கூறுவதாயின் “வைக்கோலில் நாய் படுத்துக் கொண்டு தானும் அதனை உண்ணாமல் மாட்டையும் உண்ணவிடாமல் துரத்துவது” போன்று தான் இப்படியானவர்களின் சிந்தனை.
“மக்கள் சேவை மகேசன் சேவை” என்பது ஆன்றோர் வாக்கு அதாவது மக்களுக்கு செய்கின்ற சேவைகள் இறைவனுக்கு செய்கின்ற சேவைக்கு சமமானது என ஒப்பிடுகின்றனர். அவ்வாறான புனிதமான சேவைக்காக தங்களை அற்பணிக்கின்ற, விட்டுக்கொடுக்கின்ற, உண்மையாக செயற்படுகின்ற உணர்வாளர்களை வரவேற்க வேண்டும். வாழ்த்த வேண்டும், தட்டிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு விட்டுக் கொடுப்பவர்களாகவும், தட்டிக் கொடுப்பவர்களாகவும் இருந்த சமூகங்களே இன்று பாரியளவில் எழுச்சி கண்டிருக்கின்றது.
இவ்வாறான சமூக மாற்றங்கள் எமது சமூகம் காண்பதற்கு இங்குள்ள ஆர்வலர்கள், பெரியோர்கள், கல்விச் சமூகம், மாற வேண்டும், இவர்களது மனநிலை மாற வேண்டும், முயற்சியாளர்களையும், புத்துருவாக்கம் புனைபவர்களையும், சாதனை படைக்க துடிக்கின்றவர்களையும், தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி உயர்த்த வேண்டும். அத்துடன் தமக்குள் இருக்கும் அனுபவங்களையும், அறிவுத்திறனையும் வழங்கி வெற்றியடையச் செய்து சமூகத்தை புகழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.
சாதனை படைக்க துடிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு முதுமொழியை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்” எமக்கு பின்னால் ஒரு சக்தி இருக்கின்றது அச்சக்தி எமக்கு தட்டிக் கொடுக்கும் என்று நினைத்து உங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம். நாளை உங்களுக்கு பின்னால் இன்னும் பல சக்திகள் ஒன்றுசேரும்.
(வயிரமுத்து துசாந்தன்)

Post a Comment