Header Ads

ஆரோக்கியமான சுகாதாரத்தை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குதல்

ஆரோக்கியமான இலங்கை தேசிய சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைக்காடு இந்து இளைஞர் அறநெறிப்பாடசாலையில் பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான சுகாதாரத்தை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு  இன்று(07) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


இவ்விளக்கத்தினை மகிழடித்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் பி.சபாநாதன் வழங்கியதோடு இந்நிகழ்வில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன், இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் த.மேகலா, அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.










கருத்துகள் இல்லை