முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா
மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்
திறப்பு விழா இன்று(28) செவ்வாய்க்கிழமை வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக
இடம்பெற்றது.
நான்கு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார். இக்கட்டிடமானது நான்கு வகுப்பறைகளையும், ஓர் அதிபர் அலுவலகத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் - 01முதல் தரம் - 05வரையான மாணவர்கள் கற்பதுடன் இதுவரை மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பலநோக்கு மண்டபத்திலும், தற்காலிக கொட்டில்களிலும், மரநிழல்களிலும் தங்களது கல்வியை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டிடம் இல்லாத அச்சூழலிலும் முதன்முதலாக இப்பாடசாலையில் புலமைப்பரீட்சை பரீட்சைக்கு 27மாணவர்கள் தோற்றி 27மாணவர்களும் 100புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், 7மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்திருந்தமையும் இங்கு எடுத்துக் காட்டத்தக்கது.
வித்தியாலய அதிபர் க.கிருபைராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் ஞா.சிறிநேசன், மகேந்திரகுமார், ஹரிகரராஜ், பொறியிலாளர், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பெற்றார்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment