இராமகிருஸ்ணா விளையாட்டு கழக உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி (Video)
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் "லூதர் கிங்" என்ற பெயருடன்
ஆரம்பிக்கப்பட்ட முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழகம் தனது 46 வது
அகவையையும், உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் தமது சொந்த மைதானத்தில் 4 வது
தடவையாக நடாத்திய உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி 13,14 ஆகிய இரு
நாட்களும் இடம்பெற்றது.
24
கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு
அணி இறுதிப்போட்டியில் பனையறுப்பான் சக்தி விநாயகர் அணியினரை எதிர்த்து 01
கோளினை செலுத்தி தனது சொந்த மண்ணில் 2 வது தடவையாக சம்பியனானது.
இந்நிகழ்வில்
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான
திரு. சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக
பாடசலையின் அதிபர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள்,கிராம அமைப்புக்களின்
பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.நேற்றையதினம் (14) இடம்பெற்ற இறுதி
நிகழ்வை பார்வையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கூடியிருந்தனர்
என்பதுடன் வெற்றிக்களிப்பினை வெளிப்படுத்தி இசை முழக்கமும் நடைபெற்றது.



Post a Comment