Header Ads

முனைக்காடு பாடசாலைகளில் 5மாணவர்கள் சித்தி

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று  முனைக்காடு பாடசாலைகளில் 5மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

அவ்வகையில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் 165புள்ளிகளைப் பெற்று வசந்தகுமார் பிரகர்சனும், 158புள்ளிகளைப் பெற்று பரமேஸ்வரன் லுகர்சனாவும் 157புள்ளிகளைப் பெற்று பாக்கியராசா சோபிதாவும் சித்தியடைந்துள்ளனர்.

அதே போன்று முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் 169புள்ளிகளைப் பெற்று சிவகுமார் சோபிநிதனும், 157புள்ளிகளைப் பெற்று மயில்வாகனம் டேஸ்கரனும் சித்தியடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இதற்காக உழைத்து நின்ற அதிபர், ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தி நிற்கின்றனர்.