Header Ads

நாகசக்தி கலை மன்றத்தினை பாராட்டுகின்றேன் - கலாசார இணைப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குநிலையில் நாற்பத்தி நான்கு(44) கலைமன்றங்கள் உள்ளன. அதில் சிறப்பாக இயங்குகின்ற கலைமன்றமாக  நாகசக்தி கலைமன்றம் காணப்படுகின்றது. இங்கு வருடம்தோறும் பாரம்பரிய கலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. அவ்வகையில் இக்கலைமன்றத்தினை பாராட்டுகின்றேன். அத்தோடு கலையையும் வளர்க்க வேண்டும் கலைஞர்களின் குடும்பங்களும் வாழவேண்டும் என மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்வன் முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கலைமன்றத்தின் தொடர்செயற்பாட்டை கொண்டு செல்வதற்கு நிதி மூலங்களை தேடவேண்டும் இதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் கூத்துப்பள்ளி அமைக்கப்பட்டு பணமும் பெறப்பட்டு கலையும் வளர்வதுடன்  அதனோடு இணைந்த மக்களும் கலையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதுபோல நாமும் கலையையும் வளர்க்க வேண்டும் கலைஞர்களின் குடும்பங்களும் வாழவேண்டும் இதன்மூலமாக இன்னும் கலைகளை வளர்க்க முடிவதுடன் கலையை அழித்துவிடவும் முடியாது. மேலும் பெண்கள் சமத்தும் என பேசிக்கொண்டிருக்கின்றோம் அந்த பேச்சுப்போல் பெண்களையும் கலைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.