நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பொங்கல் நிகழ்வு
நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பொங்கல் நிகழ்வு
இன்று(16) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில்
இடம்பெற்றது.
இதன்போது கோமாதவுக்கு பூசைநிகழ்வுகளும், பட்டிக்காரர் கௌரவிப்பும், நடனநிகழ்வுகளும், பாரம்பரிய உழவர், பொலிப்பாடல்களும் பாடப்பட்டது. மேலும் பிரதேசத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாடு வளர்ப்பு முறை, நோய்த்தாக்கம், வளர்க்கப்பட்ட இனங்கள் தற்காலத்தில் வளர்க்கப்படும் மாட்டு இனங்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வேளாண்மை செய்கை முறை, கடந்த காலங்களில் செய்கைப் பண்ணப்பட்ட நெல்லினங்கள், தற்காலத்தில் செய்கை பண்ணப்படும் நெல்லினங்கள் இவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நாகசக்தி கலை மன்றத்தின் தலைவர் இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி அழகியல் கற்கை நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், பிரதேச முதுமைகள், கலைஞர்கள், விவசாயிகள், பட்டிக்காரர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment