Header Ads

முனைக்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு பாலர் பாடசாலையில் 2016ம் ஆண்டு புதிதாக இணைந்து கொண்டு மாணவர்களை ஏற்கனவே பாலர் பாடசாலையில் கற்கும் மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று(10) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் எதிர்காலத்தில் தாங்கள் எதுவாக தொழில் செய்ய விரும்புகின்றனரோ அதுவாக தங்களை அலங்கரித்திருந்தமையும் காணமுடிந்தது.

இந்நிகழ்வில் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி குருக்கள், சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.