முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை
மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான கோட்டமட்ட குழுவிளையாட்டுப் போட்டிகளில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் எல்லே, உதைபந்து, வலைப்பந்து, கரம் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.
எல்லேப் போட்டியில் ஆண் அணியினர் முதலிடத்தையும், உதைபந்து 15வயது, 19வயதுப் பிரிவு ஆண்கள் முதலிடத்தையும், வலைப்பந்து போட்டியில் 15வயது, 17வயது, 19வயது பெண்கள் முதலிடத்தையும், கரம் போட்டியில் 19வயது. 17வயது ஆண் பிரிவினர் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
Post a Comment