முனைக்காடு கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு
துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் காலை மரதன் ஓட்டப்போட்டி பிரதான சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பின்பு கிறிக்கட் சுற்றுப்போட்டியும் பிற்பகல் வேளையில் முட்டி உடைத்தல், தலையணைச்சமர், கயிறு இழுத்தல், மிட்டாய் ஓட்டம் வழுக்குமரம் ஏறுதல் போன்ற பல்வேறு சிறுவர், பெரியவர்கள், பெண்கள் ஆகியோருக்கான போட்டிகள் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் சு.கிரிசாந் தலைமையில் நடைபெற்ற பாராம்பரிய விளையாட்டு நிகழ்வில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment