உதைபந்தாட்ட போட்டியில் இராமகிருஸ்ணா வாகை சூடியது.
நடராஜானந்தபுரம் சக்தி விநாயகர் விளையாட்டு;க்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த சனி, ஞாயிறு, திங்கள்(29,30,31) ஆகிய தினங்களில் நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடத்தைப் பெற்றது.
40க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய உதைபந்தாட்டாப்போட்டியில் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டுக்கழகமும், முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இருகழகமும் ஒன்றையொன்றை எதிர்த்தாடி இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் ஒரு கோளினை புகுத்தி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
போட்டியில் பங்கேற்று வெற்றிக்காக உழைத்த இராமகிருஸ்ண விளையாட்டுக்கழக வீரர்களுக்கு முணைமண்ணின் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.









Post a Comment