முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு
ஈழமணித்திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தென்மேற்கே தேமதுரத் தமிழ் தித்தித்து சிறப்புற்று விளங்கும் முனைக்காடு கிராமத்தில் பன்னெடுங்காலமாய் பந்தலிட்டு மடைபரவி வழிபாடாற்றிய அன்னை ஸ்ரீ முத்துமாரியம்பாளின் வருடாந்த அலங்கார உற்சவச் சடங்கு 15.06.2016ம் திகதி புதன்கிழமை சித்திரை நட்சத்திரமும் தசமித்திதியும் கூடிய சுபவேளையில் திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 20.06.2016ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை திருக்குளிர்த்திலுடன் நிறைவுபெறவிருக்கின்றது.
மேலும் திருக்கம்பம் ஏறுகின்ற நிகழ்வு 18.06.2016 சனிக்கிழமையும், தீமிதிப்பு 19.06.2016ம் திகதியும் இடம்பெறவுள்ளது.
சடங்கு காலங்களில் மதிய பூசை பகல் 01மணிக்கும் இரவுப்பூசை 12.30மணிக்கும் நடைபெறும். சடங்கை சிறப்பிக்கும் வகையில் பஜனைவழிபாடுகள், கதாப்பிரசங்கள், கலைநிகழ்வுகள் என்பனவும் நடைபெறவுள்ளது.
Post a Comment