முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிப்பு வைபம் பக்தி பூர்வமாக நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
பிற்பகல் 04மணிக்கு வாவியில் கடற்குளிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஆலயத்தில் பூசைநடைபெற்று மாலை 07.30மணிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்தியை நிறைவு செய்யும் பொருட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீமிதித்தனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் பங்கேற்றிருந்ததுடன் காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்ணம் செய்தல், தீமித்தல் போன்ற நேர்த்திகளையும் அடியார்கள் நிறைவு செய்தமையை காணமுடிந்தது.
ஆலயத்தின் வருடாந்த சடங்கு கடந்த 15.06.2016ம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நேற்று தீமிதிப்பும் இன்று(20) திங்கட்கிழமை அதிகாலை திருக்குளித்திலும் இடம்பெற்று ஆலய சடங்கு நிறைவுபெற்றது.



Post a Comment