Header Ads

படுவான் சமரை வெற்றி கொண்டது இராமகிருஸ்ணா

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று(25) இன்றும்(26) நடைபெற்ற படுவான் சமர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடத்தை பெற்று வெற்றியீட்டியது.

முனைக்காடு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் 32 அணிகள் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம், காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகம் என்பன தெரிவு செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இறுதிச்சுற்று நடைபெற்றது. 


இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் ஜெகன் அணியினருக்கு எதிராக ஒரு கோளினை இட்டு முதலிடத்தை பெற்று வெற்றிபெற்றனர்.

இதன்போது சிறந்த பந்துக்காப்பாளருக்கான கிண்ணத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக வீரர் கு.அரும்பொருள் பெற்றுக்கொண்டார்.