
தேனாடு எனச்சிறப்புறும் மட்டக்களப்பின் தெற்கே அன்று மானினம் துள்ளி விளையாட, மந்திகள் மரம் பாய்ந்து தாவ, இயற்கை வனப்புடன் எழில் கொஞ்ச தான்தோன்றீஸ்வரர் திருவேட்டையாடவென தலம் கொண்ட வெண்மணல் நிறைந்து மணற்காடு எனச்சிறப்பு பெயர் பெற்ற வரலாற்றுக்கிராமம்
காப்புமுனைக்காடுதனில் என வரலாறு கூறும் இன்று பழம் பதியாக திகழ்கின்ற முனைக்காடுதனில் எழுந்தருளி அருள் கொடுக்கும் வீரபத்திரப்பெருமானுக்கு 29.06.2016 புதன்கிழமையன்று திருக்கும்பம் வைத்தலுடன் சடங்கு உற்சவம் ஆரம்பமாகி இன்று (01) 3ம் நாள் சடங்கு சிறப்பாக நடைபெற்று வீதியூர்வலமும் நிறைவுற்று இருக்கின்றது.
எதிர்வரும் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தீமிதிப்பு நிகழ்வும், 04.07.2016 அதிகாலை 3.00 மணிக்கு பள்ளயமும், காலை 10.00 மணிக்கு கும்பம் சொரிதலும் சர்க்கரை அமுதுடன் இனிது நிறைவுற இருக்கின்றது.
Post a Comment