முனைக்காடு கிராமத்தில் அபிமன்னன் சண்டை வடமோடி கூத்து சதங்கை அணி விழா
மகாபாரத்தில் இடம்பெறும் கதையொன்றினை கொண்டு உருவாக்கப்பட்ட அபிமன்னன் சண்டை வடமோடி கூத்து சதங்கை அணி விழா இன்று(03) ஞாயிற்றுக்கிழமை முனைக்காடு கிராமத்தில் இடம்பெற்றது.
முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் 2016ம் ஆண்டின் பாராம்பரிய கலைசெயற்பாட்டின் ஒன்றாக அபிமன்னன் கூத்து பல நாட்கள் ஆடப்பட்டு இன்று சதங்கை அணிவிழா நடைபெற்றது. குறித்த மன்றமானது வருடாந்தம் பாரம்பரியத்தினை வளர்க்கும், கட்டிக்காக்கும் நோக்கில் வருடாந்தம் ஒவ்வொரு கூத்தினை ஆடி அரங்கேற்றி வருகின்றது. மேலும் இளம் புதுக்கலைஞர்களையும் ஒவ்வொரு வருடமும் இணைத்து முதுக்கலைஞர்களையும் ஒன்றிணைத்து கூத்தினை அரங்கேற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அபிமன்னன் சண்டை வடமோடி கூத்து அரங்கேற்ற விழா எதிர்வரும் 10.07.2016ம் திகதி இரவு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.













Post a Comment