Header Ads

கொக்கட்டிச்சோலையில் க.பொ.த(உ.த) மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஆரம்பம்

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தோற்றவுள்ள மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு இன்று(16) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒளிக்கல்லூரி அமைப்பின் ஏற்பாட்டில் தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையுடன் உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற வழிவகுக்கும் வகையில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு கொக்கட்டிச்சோலை, நாவற்காடு ஆகிய இரு இடங்களிலும் இக்கருத்தரங்கு நடைபெறுகின்றது.


கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கையேடுகள், கோப்பு என்பனவும் இலவசமாக வழங்கப்படுகின்றது. வருடாவருடம் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கல்விச்செயற்பாடாக குறித்த கருத்தரங்கினை ஒளிக்கல்லூரி அமைப்பின் ஊடாக நடாத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஒளிக்கல்லூரி அமைப்பின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுக்கு மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரநுதன், உதவிக்கல்விப்பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபை தலைவர் க.சிவகுருநாதன், செயலாளர் பொ.டிமலேஸ்வரன், ஒளிக்கல்லூரி அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.