முனையூர் சொத்து முதல் பாராளுமன்ற உறுப்பினருடனான கலந்துரையாடல்
முனைக்காடு கிராமத்தின் முதல் பாராளுமன்ற உறுப்பினரும், படுவான்கரைப்பகுதியின் முதல் பாராளுமன்ற உறுப்பினருமான தற்போது சுவிஸ் நாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் அழகு குணசீலன் உடனான கிராமத்தின் அக்கால செயற்பாடு தொடர்பிலும் இக்கால செயற்பாடுகள் பற்றியும்; கலந்துரையாடல் ஒன்று அண்மையில் முனைக்காடு ஒளிக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர்சார்ந்த குழுவினரால் அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு தொடர்பிலும் இக்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கிராமத்தின் செயற்பாடுகள், எதிர்காலத்தில் எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் கிராமத்தின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பட்டிப்பளைப்பிரதேசத்திலே முதன் முதலாக முனைக்காடு கிராமத்தில் உருவாக்கப்பட்ட கலைகதிர் கலாமன்றத்தின் செயற்பாடு தொடர்பிலும் குறிப்பிட்டார்.
Post a Comment