நாகசக்தி கலை மன்றம் மாகாணப்போட்டி பலவற்றில் வெற்றி
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலைப் போட்டிகளில் முனைக்காடு நாகசக்தி கலைமன்றம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற வசந்தன், கும்மி, கூத்து போன்ற போட்டிகளிலே கலைமன்றம் வெற்றிபெற்றது.
கூத்து, வசந்தன் ஆகிய இரு போட்டிகளிலும் முதலாம் இடத்தினையும், கும்மி போட்டியில் இரண்டாம் இடத்தினையும், காவடி போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தில் உள்ள பல்வேறு கலைக்கழகங்களும் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
போட்டியில் வெற்றியீட்டி நாகசக்தி கலை மன்ற கலைஞர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.



Post a Comment