Header Ads

இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடம்

மண்டூர் தம்பலவத்தை விநாயகர் விளையாட்டு கழகம் சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில்  நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு, அம்பாறை,  வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு போன்ற பிரதேசங்களை சேர்ந்த 45கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன.


இதில் இறுதிசுற்றுக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா  விளையாட்டுக்கழகம், சொறிக்கல்முனை விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவாகி முனைக்காடு இராமகிருஸ்ணா  விளையாட்டுக்கழகம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. 

வெற்றிக்காக உழைத்த வீரர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.