முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு
அருகில் உள்ள பாடசாலை அதிசிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள ஆரம்பக்கல்வி கற்றல் வளநிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை(20) வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க.துரைராசசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான இ.துரைரெட்ணம், மா.நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment