முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று(12) புதன்கிழமை இ.குகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆசிரியர்கள், அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. அஞ்ஞானத்தினை நீக்கி மெஞ்ஞானத்தினை ஊட்டும் அதிபர், ஆசிரியர்களை கௌரவித்து மாணவர்களினால் மாலை அணிவித்து, நினைச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களை புகழ்ந்து பாடல்களும், கவிதைகளும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ப.மானாகப்போடி குருக்கள், முன்னாள் ஓய்வு பெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம், பாடசாலை அதிபர் க.கிருபைராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவனின் பெற்றோரினால் அதிபர், ஆசிரியருக்கு பரிசுப்பொருளும் வழங்கப்பட்டது.



Post a Comment