கிழக்கு மாகாண பண்பாட்டு பேரணியில் நாகசக்தி கலைமன்றத்தின் கலை நிகழ்வுகள்
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற தமிழ் இலக்கிய விழாவின் ஆரம்ப நிகழ்வான கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தர் சமாதியில் இருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணியில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன், கும்மி , கரகம் போன்ற நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.
வியாழக்கிழமை காலை 07மணிக்கு சுவாமி விபுலானந்தர் சமாதியில் இருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணி மட்டக்களப்பு மகாஜன கல்லூரி விழா மண்டபம் வரை சென்றடைந்தது.
வெள்ளிக்கிழமை(20) மாலை இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் தமிழ் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment