Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திற்கு பேண்ட்வாத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் எண்பதினாயிரம் பெறுமதியான பேண்ட்வாத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் (03.10.2016 திங்கட்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி டினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.பிரபாகரன், த.குணரெத்தினம், செயலக கணக்காளர், செயலக நிருவாக உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர் கலந்து கொண்டு பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியரிடம் வழங்கி வைத்தனர்.