முனைக்காடு கிராமத்தில் ஆறு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் : பல மாணவர்கள் சித்தி
முனைக்காடு கிராமத்தில் ஆறு மாணவர்கள் 2016ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
தோற்றிய மாணவர்களில் பெரும்பாலன மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்திப்புள்ளிகளுக்கு(70புள்ளி) மேல் பெற்று சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் உள்ள முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நான்கு மாணவர்களும், முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
முனைக்காடு சாரதா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்தேர்ச்சியாக மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மாணவர்கள் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும், அதற்காக உழைத்துநின்ற அதிபர், ஆசிரியர்களுக்கும் எமது முணைமண்ணின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
குறிப்பு : மாணவர்களின் உளவியல் தாக்கங்களை கருத்தில் கொண்டு படங்கள் பிரசுரிக்கவில்லை.
Post a Comment