Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் இன்று(03) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம், தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், அதிக நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள், நேரத்திற்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள், விடுமுறை குறைவாக பெற்ற ஆசிரியர்கள், பாடரீதியாக  கூடிய அடைவு மட்டத்தினை பெற்ற ஆசிரியர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகியோர் சாதனையாளர்களாக பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர் பாராட்டு நிகழ்வின் நினைவு மலர் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், வூட்ஸ் பிராந்திய குழுமத் தலைவர் ம.யோகேஸ்வரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான க.கரிகரராஜ், எஸ்.சுரநுதன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், இலங்கை வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.