பணத்தினை வீணாக செலவு செய்யும் இளைஞர் மத்தியில் முனைக்காடு பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கி வைத்த இளைஞர்கள்
முனைக்காடு கிராமத்தில் பிறந்து வெளிநாடுகளில் தொழில்புரியும் ஐந்து இளைஞர்களின் நிதியுதவியில் பாடசாலையில் வறுமைக்கோட்டின் கீழ் கல்விபயிலும் மாணவர்களுக்கு அவர்களது 2017ம் ஆண்டு கல்விச்செயற்பாட்டிற்குரிய அனைத்து அப்பியாசக்கொப்பிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் அனைத்தைம் வழங்கி வைக்கப்பட்டது.
கிராமத்தினைச் சேர்ந்த சி.தயர்சன், ச.சிவகுமார், ப.லேகேஸ்வரன், க.விதுசனன், ஜெ.சத்தியானந்தம் ஆகிய இளைஞர்களின் நிதியுதவியில் குறித்த கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன், விடுதிக்கல் பாடசாலை அதிபர் மா.சத்தியநாயகம், பாடசாலை ஆசிரியர்களான செ.மேகநாதன், தங்கத்துரை யோதீஸ்வரி, கிராம சேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன், உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன், கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் ம.கேதீஸ்வரன் மற்றும் உதவி வழங்கிய இளைஞர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இன்னும் இதுபோன்று பல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மிகவும் வியர்வை சிந்தி உழைத்த பணத்தினை வீணாக செலவழிக்கும் பல இளைஞர்கள் மத்தியில் நீண்டு நிலைக்க கூடிய வகையில் கல்விக்காக உதவி வழங்கிய ஐந்து இளைஞர்களுக்கும் எமது முனைமண்ணின் வாழ்த்துக்களும். இது போன்ற பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க சிறந்;த ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Post a Comment