முனைக்காடு பாடசாலைக்கு சுடர் ஒளி பத்திரிகையினால் வாசிப்பு அட்டை, சஞ்சிகைகள் வழங்கி வைப்பு
சுடர்ஒளி பத்திரிகையின் 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டு வாசிப்பை நேசிப்போம் என்ற எண்ணக்கருவில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திற்கு ஒவ்வொரு வகுப்பறைகளுக்களிலும் காட்சிப்படுத்துவதற்கான வாசிப்பு அட்டை மற்றும் சஞ்சிகைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிராந்திய ஊடகவியலாளரின் எற்பாட்டில் வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன், பாடசாலை பிரதிஅதிபர் மா.பாலிப்போடி வித்தியாலய ஆசிரியர் செ.மேகநாதன், ஆசிரிய ஆலோசகர் இ.கண்ணன், மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment