களிமண் சுவரும், ஓலைக்கூரையும்
கம்பு நாட்டி வளைச்சுவர வரிச்சுப்பிடிச்சு, அதற்காக காட்டிலே இருந்து கிடைத்த கொடியை பயன்படுத்தி வரிச்சுக்கு இடையிலே களியை வைத்து வளைத்துவர அழகாக பூசி, கூரைக்கு வைக்கோலும் அல்லது ஓலை மட்டையும் பயன்படுத்தி வீடு அமைத்து நிலத்திற்கும் களி இட்டு சாணம் முழுகி காட்சி கொடுத்த வீடுகள் இன்றில்லை. ஆனாலும் பலருக்கு ஞாபகத்தில் உள்ளது.
மழைபெய்தால் களிகரையும், வெள்ளம் நின்றால் சுவர் விழும் அதற்காக வளைத்துவர மண்ணைக்கூட்டி தாவரம் என்று அதற்கு சொல்லி அழைத்ததும் பலருக்கு தெரியும். ஆனாலும் தற்போது பத்து வயதிற்கு கீழ்பட்டு இருக்கின்ற இளம் சந்ததிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு சொல்லிதான் தெரியவைக்க வேண்டும்.
மழையாலதான் பிரச்சினையென்றால் எலியாலும் பிரச்சினைதான். வீட்டுக்குள்ளே எலிப்பொந்து தேடிவைக்கும் சாப்பாட்டுப்பொருளும் பொந்துக்குள், மண்ணுதானும் வீட்டுக்குள் அள்ளி எடுத்து வெளியில் கொண்டுவந்து எலிபொந்தை அடைத்தாலும் அதுவும் விட்டுவிலகுவதில்லை.
மழைபெய்தால் நிலகுளிரும், வெயில் எறித்தாலும் இயற்கையான குளிர்ச்சிதான், இப்போதைய காலம்போல் மின்விசிறில்லை, மின்விளக்கில்லை ஆனாலும் அதைவிட இயற்கை காற்றும் சுகமான நித்திரையை கொடுக்கும், மனநிறைவும் கிடைக்கும். வீட்டுக்குள்ளே குப்பி விளக்கு, குடிசையையே அழகு கொடுத்துவிடும்.
நம்மவூர் பழமை தொடரும்……..
- வ.துசாந்தன் -



Post a Comment