Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் அதிபராக மூத்ததம்பி சிவகுமாரன் கடமையாற்றிய காலப்பகுதியில் வரலாற்று சாதனைகளும் இடம்பெற்றுள்ளன.

2014.11.01ம் திகதி குறித்த பாடசாலையின் அதிபராக மூ.சிவகுமாரன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற காலத்திலிருந்து அவர் இடமாற்றம் பெற்று சென்ற இன்றைய தினம்(22) வரை நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பார்க்கின்ற போது,


இப்பாடசாலையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக 2013ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினர். அப்பெறுபேற்றின் அடிப்படையில் 38வீத சித்தியும், 2014ம் ஆண்டு 53.8வீத சித்தியும், 2015ம் ஆண்டு 23வீத சித்தியும் பெறப்பட்டிருந்தது. 2016ம் ஆண்டு வரலாற்றில் அதிகூடிய சித்தி வீதமாக 77வீத சித்தி வீதம் பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று 2015ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக 8ஏ தர சித்தியும், ஒரு சீ தர சித்தியினையும் பெற்று வலயத்தில் முதலிடத்தினை ஒரு மாணவி பெற்றிருந்தமையும் எடுத்துக் காட்டத்தக்கது.

சாதாரணதர சித்தி வீதமும் 2014ம் ஆண்டு 28வீதமாகவும், 2015ம் ஆண்டு 25வீதமாகவும் இருந்த நிலையில் 2016ம் ஆண்டு 42.6வீதமும் பெறப்பட்டுள்ளது. இதன்மூலமாக கோட்டத்தில் சித்தி வீதத்தில் 2ம் இடத்தினை பெற்ற பாடசாலையாக திகழ்கின்றது.

தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களின் வீதத்திற்கு அமைய 2010 தொடக்கம் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 2014ம் ஆண்டு 78வீத சித்தியும், 2015ம் ஆண்டு 59வீத சித்தியும், 2016ம் ஆண்டு 68வீத சித்தியும் பதிவாகியுள்ளது. குறித்த சித்தி வீதங்களே குறித்த ஆண்டுபகுதிக்குள் பதிவாகியுள்ள அதிகூடிய சித்தி வீதங்களாகும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் முனைக்காடு விவேகானந்த வித்தியாலம் குறித்த அதிபரின் காலப்பகுதிக்குள்ளே தெரிவு செய்யப்பட்டு மூன்று கட்டடங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டக் கொண்டிருக்கின்றது. 

பேட்ண் வாத்தியத்தியமும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

மாகாணமட்டத்தில் ஆங்கில கையெழுத்து போட்டியில் திலக்சனா என்ற மாணவி 2016ம் ஆண்டு மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

முஸ்லிம் பாடசாலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, பொங்கில் விழாவும் குறித்த பாடசாலையில் 2017ம் ஆண்டு நடைபெற்றது. மேலும் பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டுப் போட்டி போன்றனவும் நடாத்தப்பட்டன. 

2017ம் ஆண்டு வலய வெளிவாரி மதிப்பீட்டின் படி 63வீத புள்ளியையும், 2015ம் ஆண்டு 65வீத புள்ளியையும் பெற்றிருக்கின்;றனர்.

பாடசாலையின் கடமையை பொறுப்பேற்றதிலிருந்து இடமாற்றம் பெற்று செல்லும் வரை சிறப்பான சேவை புரிந்த அதிபர் மூ.சிவகுமாரன் அவர்களுக்கு எமது முனைமண்ணின் சார்பாக நன்றிகளையும், தொடர்ந்தும் தங்களது சேவை சிறக்க பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.