முனைக்காடு பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்
முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக மாணிக்கப்போடி சத்தியநாயகம் நியமிக்கப்பட்டு இன்று(22) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த பாடசாலையின் பழைய மாணவரான இவர், இப் பாடசாலையில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், சிறிது காலம் பதில் அதிபராகவும் கடையாற்றிய இவர், விடுதிக்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முனைக்காடு கிராமத்தின் பல்வேறு அமைப்புக்களில் இருந்து சேவையாற்றியதுடன், ஒளிக்கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முனை மண்ணின் உறவிற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Post a Comment