Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சேவை பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற மூ.சிவகுமாரன் அதிபருக்கு பாடசாலை சமூகத்தினரால் அவரது சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(30) இடம்பெற்றது.


இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், பாடசாலையின் ஆசிரியர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மூ.சிவகுமாரன் அதிபரின் சேவையை பாராட்டி வாழ்த்துப்பாவும், நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.