Header Ads

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்குகளிலான சங்காபிசேகம்.

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்குகளிலான சங்காபிசேகம் நேற்று(11) செவ்வாய்;கிழமை இடம்பெற்றது.

முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடங்கள் எடுத்துவரப்பட்டது. சிரசில் பாற்குடத்தினை ஏந்தி ஆலயத்தினை வந்தடைந்து நாகலிங்கேஸ்வரருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பாலபிசேகம் செய்யப்பட்டது.

சங்காபிசேகத்திற்கான சங்குகளை இளையதம்பி கோகுலநாதன் (சின்னதம்பி) கொள்வனவு செய்து ஆலயத்திற்கென அன்பளிப்பாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.