Header Ads

முனைக்காடு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டியில் வெற்றி

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு வெற்றியீட்டியுள்ளனர்.

பேச்சு, பரதநாட்டியம், பண்ணிசையும், பஜனையும்  போன்றவற்றில் வெற்றியீட்டியுள்ளனர்.


தரம் 4மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், மே.நிவேதிகா முதலிடத்தினையும், 2ம் இடத்தினை கே.டிபானுஜன் என்ற மாணவனும் பெற்றுள்ளனர்.

தரம் 05மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், ப.குருசிகா மூன்றாம் இடத்தினையும், தரம் 06மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் ஜெ.கபிலாசினி மூன்றாம் இடததினையும், பரதநாட்டியத்தில் முதலாம் இடத்தினையும், பண்ணிசை, பஜனை போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பேச்சு போட்டியில் முதலாம் இடத்தினை பெற்ற மே.நிவேதிகா என்ற மாணவியும், பரதநாட்டியத்தில் முதலிடத்தினை பெற்ற குழுவினரும் மாவட்ட போட்டியில் கலந்து கொள்ளமையும் குறிப்பிடத்தக்கது.