Header Ads

சம்பியனானது மட்டக்களப்பு புளியந்தீவு அணி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் 48வது ஆண்டு நிறைவினையும், உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு புளியந்தீவு அணியினர் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் சம்பியனானது.


29அணிகள் பங்கேற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மாங்காடு இளைஞர் அணியும், மட்டக்களப்பு பாடுமீன் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர். போட்டிக்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள், மட்டக்களப்பு புளியந்தீவு அணியினர் மாங்காடு இளைஞர் அணியினருக்கு எதிராக இருகோள்களை இட்டு சம்பியனாகினர்.

கடந்த 01ம், 2ம் திகதிகளில் நடைபெற்ற, இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை மாங்காடு இளைஞர் அணியினரும், மூன்றாம், நான்காம் இடங்களை முனைக்காடு இராமகிருஸ்ணா அணிகளும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஞாபகார்த்த கிண்ணங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த விளையாட்டு வீரரர்கள் மூவருக்கு கிண்ணங்களும், முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
போட்டியின் இறுதிநிகழ்வுக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ரி.யோகனந்தராசா, அதிபர்களான மா.சத்தியநாயகம், க.கிருபைராசா மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.