Header Ads

முனைக்காடு கிராமத்தின் மூன்றுபேர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் முனைக்காடு கிராமத்தில் பிறந்து இன்றுவரை தாய் மண்ணை நேசித்து வாழ்ந்துவரும் கிராம உத்தியோகத்தர்கள் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


இக்கிராமத்தை பொறுத்தமட்டில் பல கிராம உத்தியோகத்தர்கள் உருவாகியுள்ள நிலமையிலும் இன்றுவரை எமது கிராமத்தில் வசிக்கின்ற க.சுவேந்திரன், திருமதி யேதீஸ்வரி, சி.ஜீவிதன் ஆகியோரே தமது பதவி வழியில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி தி.மா.கணேசராஜா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இது தவிர முனைக்காடு மண்ணில் பிறந்து இந்தப்பிரதேசத்தில் தமது கடமைகளை செய்து வருகின்ற ப.தேவானந்தம்,க.சிவகுருநாதன் ஆகியோரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.