Header Ads

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற முனைக்காடு மக்களின் திருவிழா

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக போற்றப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் திருவிழா நேற்று(06) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


மலைப்பிள்ளையார், முருகப்பெருமான் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு பூசை ஆராதனைகள் நடைபெற்று, பின் வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து உள்வீதி, வெளிவீதி சுவாமி வலம் வரும் நிகழ்வும் நடைபெற்றது.

இப்பூசை ஆராதனைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.