Header Ads

பணமே உனைத்தேடி......











பலலெட்சம் பணம் கொடுத்து 
பல மைல் கடல் கடந்து
பணமெனும் காகிதமே உனை 
பல்லாண்டாய் தேடுகின்றேன்...

கலங்கிய கண்களோடு 
இலங்காபுரி கடந்து 
அலைந்து தவிக்கின்றேன் 
பணமே உனைத்தேடி....


அலை கடலிலும் ஆழமான 
அன்னையின் அன்புள்ளத்தை 
தொலைத்து நான் தவிக்கின்றேன்
பணமே உனைத்தேடி....

கறை வடிந்த உடை அணிந்து 
நிறைமனதை நான் தொலைத்து 
நிம்மதியை அடவு வைத்து 
நித்தமும் தேடுகிறேன் பணமே உனை...

பட்டினி நான் கிடந்து    
நித்திரை நான் இழந்து 
பகலிரவாய் அலைகின்றேன் 
பணமே உனைத்தேடி....

காற்றிலும் கலந்திருக்கும் 
கடவுளும் பார்த்ததில்லை
வறுமைதான் வாழ்வென்ற
தலைவிதியோ புரியவில்லை..

காலக்கொடுமையிதோ 
கடவுளின் தன் செயலோ 
முன் செய்த தீவினையோ 
ஏழையாய் பிறப்பதற்கு...

நாடுழந்து வீடுழந்து 
ஊரிழந்து உறவிழந்து 
அயலான் நாட்டில் அலைகின்றேன்
பணமே உனைத்தேடி....

சொத்துக்கள் பல குவித்து 
சுகமாய் வாழும் இரக்கமற்றுப்போன
எஜமான்கள் மத்தியிலே
அன்றாட உணவுக்காய் அலைகின்றோம் உனைத்தேடி..

பத்துச்சத வட்ட புத்துயிர் பெற்றதனால்
நித்தமுனைத் தேடுகின்றேன்
பட்ட கடன் நான் முடிக்க....

பத்துச்சத வட்டிக்கி
பணமே உனைக்கொடுத்து 
நித்தமுயிர் வாழ்கிறது
நீதியற்ற மனித குலம்...

வாரமொருமுறை 
வெளிநாட்டுக் காசுடன் 
வாறுக்குள் போவோரும் சிலர்
மாதமொருமுறை பட்டகடன் தீர்க்க 
கட்டிலில் கிடந்து கண்ணீர் 
விடுவோரும் பலர்....

பணமே நீர் பார்வையில் மட்டும் 
வெறும் காகிதம்
நீ என் அருகிருந்தால் மட்டும் 
எனக்கு ஆயிரம் சினேகிதம்....

இத்தனைக்கும் மத்தியில்
எங்கெங்கோ அலைகின்றேன் 
எங்கென்றும் தெரியாமல் 
பணமே உனைத்தேடி....

சிவா .