Header Ads

அரசடித்தீவு மண்ணில் முனைக்காடு இராமகிருஸ்ணா


ரசடித்தீவு மண்ணை அதிர வைத்தது முனைக்காடு இராமகிருஸ்ணா.

இம்மாதம் 1ம்,2ம்,4ம் திகதிகளில் அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் 45வது ஆண்டை முன்னிட்டு நடாத்திய
அணிக்கு 11பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் 1ம் இடம்' பெற்றனர் முதல் சுற்றில் அம்பாரை மாவட்ட எல்மோ அணியினருடன் பலப்பரீட்சையில் வெற்றிபெற்று உள் நுழைந்த இராமகிருஸ்ணா அணியினர் காலிறுதியில் அரசடித்தீவு விக்கினேஸ்வரா பீ அணியினரையும், அரையிறுதியில் மகிழடித்தீவு மகிழை அணியினரையும் வென்று இறுதிப்போட்டியில் சில்லிக்கொடியாறு பராசக்தி அணியினருக்கு 1 கோள் போட்டு 1--0 என்ற கோள் கணக்கில் வெற்றி பெற்று அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் TR சவால் கிண்ணத்திற்கு சொந்தக்காரராகியது.

முனைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் இராமகிருஸ்ணாவுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.