முதியவளின் கண்ணீர்
தள்ளாடும் வயதில்
தானகவே நடக்கிறேன்
தவிக்கும் மனதில் தண்ணீர் ஊற்ற
நாதியில்லை சோர்ந்து போகிறது கால்கள்
வெந்துபோகிறது மனம்
தன்னம்பிக்கை தளரவில்லை
மனதில் ஈரம் இருக்கிறது
இயலாமை என்று ஏளனம் செய்யும்
மூடர்களைப்பார்த்து கோவமும் கொள்ளவில்லை
கேலி செய்யும் மனிதரையும்
மணமாதாற நேசிக்கிறேன்
பழுத்தோலை விழுந்து
குருத்தோலை வாழட்டும்
நானும் கொஞ்சம் விலகுகிறேன்
நாளும் கொஞ்சம் அழுதபடி
பிறப்பில் செல்லமாய் வளர்ந்தேன்
மணாழன் கரம்பிடித்து மகிழ்சியோடு
இருந்தேன்
மூக்குக்கண்ணாடி போட்டதில்
முதுமையாக இருக்கிறேன்
தளர்ந்துவிடவில்லை நரம்புகள்
கழன்று விடவில்லை பற்கள்
ஒடுங்கிவிடவில்லை அங்கங்கள்
அடங்கிக்கொண்டே வாழ்கிறேன்
எனை நம்பிய உறவுகளுக்காக....!
- குவேந்திரன் -
நினைவுகள்.
ஊரோடு இருக்கையில
ஊரு சுகம் தெரியவில்ல
உதிரமாய் கண்ணீர் சொரிந்தும்
உள்ளத்தில காயம் கொஞ்சமல்ல
பள்ளிக்கு போட என அம்மா அவள்
அடிக்கையில
அரக்காட்சட்டை சேட்டுடன்
அரசமர வீதியில
அரளிவிதை ஒடச்சி
குண்டடிச்ச ஞாபகம்
உள்ளமெங்கும் உலாவுதைய்யா....
சின்னச்சின்ன சண்டையிலும்
செல்லமாய் அழுகையில
சின்னம்மா கை புடிச்சி
சித்திவிநாயகர் கோயிலுக்கு போனமைய்யா......
வீதியோரம் பொண்ணுங்கள
பார்க்கையில
களிமண் உருட்டியெடுத்து
அவளக்கு எரியயில
எதிர்வீட்டு வேணி அக்கா
எனக்கடிக்க துரத்தையில
அம்மாவை கட்டியணைத்து
அழுதபடி நின்றனைய்யா......
நீ செய்யும் சேட்டையில
என் மானம் போனதடா_என
அம்மா அவள் ஏசயில
வேல விட்டு வந்த அப்பா
விறுவிறுவென எனை வந்து
அனைத்த ஞாபகம்_என் நெஞ்சினில
இருக்கிதைய்யா.....
மாரிகாலத்து மழையில
வயல்ல மீன் பிடிக்க
வாயல்கார போடியார்
எனைவிட்டு துரத்தையில
கிரவல் ரோட்டுல நான் விழுந்து
காலில் வந்த காயம்
தளிம்பு மாறாமல் இருக்குதைய்யா....
இத்தனை நினைவுகளும்
என் மனசில் நினைத்துக்கொண்டு
வெளிநாடு வந்துவிட்டேன்
அப்பாவின் ஆசையினை
அன்பாக ஏற்றபடி.....
- குவேந்திரன் -
- குவேந்திரன் -




Post a Comment