கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
முனைக்காடு வடக்கு கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
நான்கு பிள்ளைகளை கொண்ட குறித்த பெண்மணியின் வாழ்வாதரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் சிறுகடையொன்றினை அமைப்பதற்காக இவ்வுதவி வழங்கப்பட்டது.
முனையின் கரங்கள் அமைப்பிற்கு வழங்கப்பட்ட உதவி கோரல் கடிதத்தினை பரீசிலனை செய்து, நேரடியாக அவரது வீட்டின் சூழலினை பார்வையிட்டதன் பின்பே இவ்வுதவி வழங்கப்பட்டதாக கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் குறிப்பிட்டார்.
இதற்கான உதவிகளை த.தனுசன், வினோக்காந்தன், குகுதாசன், சபேசன் ஆகியோரும், முனையின் கரங்கள் அமைப்பும் இணைந்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment