Header Ads

நான் தவழ்ந்த முனையூர்


கற்பனை கொண்டு வர்ணிக்கிறேன்
கனவுகள் பல சுமக்கிறேன்
உன் அழகை வரியில் புதுப்பிக்கிறேன்
இருந்தும் எல்லைகள் கடல்தாண்டி
பேகிறது என் ஊரின் புகழ்

எங்கும் மலர்ந்திட்ட மலர்களாய்
வண்ணம் காட்டும் வண்ணத்துப்பூச்சியாய்
எழில் கொஞ்சும் உன் அழகில் தத்தித்தடுமாறுகிறேன் நான்

அழகுக்கு எல்லையில்லை
அறிவுக்கு பஞ்சமில்லை
படிப்புக்கு தொடுவானம் எல்லையாய்
புகழ் பூத்து உதிராக்கனியாய்
படர்ந்து கிடக்கிறது ஊரின் புகழ்

ஊர் உறங்கி பலநாள்
வீதிகள் விழித்தபடி
இளைஞர்கள் கூட்டம்
கண் முன்னே கவலைகள் தீர்ந்திடும்
தெருக்களின் குழந்தைகள் மகிழ்ச்சியில்..

ஊருக்கு காவலாய்
இடையூரு வந்துவிடாமல்
நான்கு திசை எல்லையிலும்
ஆலயங்கள் நிறைந்திருக்க
கஸ்டத்தில் மனம் உறுகி வணங்கிடவே
வந்த இடம் தெரியாமல்
சுமை குறைந்து சுகங்கள் நிறைந்திருக்கும் எனது ஊரில்

சின்னச்சின்ன சண்டைகளும் ஏராளம்
சின்னச்சின்ன பிரிவுகளும் ஏராளம்
எங்களுக்குள்ளே நிறைந்திருக்க
புத்திமதி சொல்லி புகழ்ந்து பாராட்டும்
பெரியவர்கள் ஏராளமாய்.

திறமைகளை பல வளர்த்து
திறன்பட உழைத்து
இளைஞர்கள் கையில்_என்றும்
ஊரின் புகழ் பல மைதான திடல்களில்
பெருமையை விதைத்திட்டு களம்
கண்ட முனையூர் நீ..


நான்கு திசை கோவில்களில்
நான்கு வித சடங்குகளால்
ஊரோங்கும் உறக்கமில்லை
உள்ளமெங்கும் உருகியபடி
உன் மக்கள் புகழ் சேர்த்திட...

வரிகளால் வர்ணிக்க
வார்த்தைகளும் நீண்டுகொண்டு
என் ஊர்தரும் அழகில்
சிதறிக்கொண்டே இருக்கிறது மனம்..

- குவேந்திரன் -