Header Ads

தோல்விகள் தான் வெற்றிக்கு முதற்படி. சாதித்து காட்டியது முனைக்காடு இராமகிருஸ்ணா.

தோல்வி ஒவ்வொன்றும் வெற்றிக்கான படிகள் என்று எமது ஆன்றோர் கூறியிருக்கின்றனர். அதனை சாதித்து காட்டியிருக்கின்றது முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம்.


கடந்த மாதம் அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனான இராமகிருஸ்ணா அதன் பின்னர்  கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியிலும் கொல்லநுலை விவேகானந்தா விளையாட்டுக்கழம் நடாத்திய உதைபந்தாட் போட்டியிலும் சாதனைகளை நிலைநாட்ட தவறியிருந்தது.

இவ்விரு தோல்விகளையும் வெற்றிப்டிகளாக எடுத்து கொண்ட இராமகிருஸ்ணா அணி வீரர்கள் கடந்த 30.09.2017, 01.10.2017 ஆகிய இரு நாட்களும் அம்பிளாந்துறை விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியிலே பலமிக்க அணிகளை எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாண்டு அதிக வெற்றிகளை பெற்று கிராமத்தின் புகழை நிலைத்திருக்க செய்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு முனை மண்ணின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.