முனைமண்ணின் வாரிசுக்கு கிழக்கு மாகாண இளம்கலைஞர் விருது.
மட்டக்களப்பு, முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்த இளையதம்பி குகநாதனுக்கு, இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தினால், அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
பல்துறைசார் கலைசெயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக இவ்விருது வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைமாணி பட்டதாரியான இவர், நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கை நிறுவகத்தின் தற்காலிக விரிவுரையாளராகவும் பணியாற்றியவராவார். எழுத்து, நாடகம், கவிதை, பாடலாக்கம், பாரம்பரிய கலைகள் போன்றவற்றில் சிறந்துவிளங்கும் இவர், சர்வதேச ஆய்வு மாநாடு, தமிழ்சங்க மாநாடு, மலையக சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசித்துள்ளார். இவரால் எழுதப்பட்ட நாடகங்கள் மூன்று தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு, அதற்கான விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும் இவரால் நெறியாழ்கை செய்யப்பட்ட மூன்று நாடகங்களும் முதலிடத்தினைப் பெற்றுள்ளன. மாகாணமட்டங்களிலும் இவரது நாடகங்கள் முதலிடத்தினை பெற்றுள்ளன.
கட்டியம் ஆற்றுகைகுழுவின் ஸ்தாபகரான இவர், இக்குழுவின் மூலமாக பல கலைசார் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார். அதேபோன்று நாகசக்தி கலைமன்றம், பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் போன்ற அமைப்புக்களோடு இணைந்து, நாடக செயற்பாடுகளை செய்ததோடு, பாரம்பரிய கலைகளை ஆற்றுகை செய்தும், கலாசார ஊர்வலங்களை நடாத்தியும் உள்ளார். உள்ளுர் கலை, பண்பாடுகளை முன்னெடுத்து செய்தல், மாற்றத்திற்கான மாணவ சமூகத்தினை உருவாக்கும் பொருட்டு கதை சொல்லல் திட்டத்தினையும் முன்னெடுத்துவருகின்றார். சமூக மாற்றத்தினை அரங்கினூடாக மாற்ற வீதி நாடகங்களை மாகாணத்தில் பல பிரதேசங்களில் ஆற்றுகை செய்திருப்பதோடு, இளைஞர்களை வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். மேலும், கிழக்கு நாட்டார் பாடல்களை தொகுத்து அதனை ஆய்வு செய்து அதற்கான குழுவினை உருவாக்கி அதன்மூலம் ஆற்றுகை செயற்பாட்டையும், கலைஞர் சந்திப்புக்களையும், உள்ளுர், வெளியூர், புத்திஜீவிகளின் சந்திப்புக்களையும் மேற்கொண்டு வரும் இவர், பல்வேறு சமூக அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முனைமண்ணின் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Post a Comment