Header Ads

துளி அருவி அமைப்பின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்.

முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு இன்று(15) திங்கட்கிழமை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

துளி அருவி அமைப்பினுடைய 9வது ஆண்டு நிறைவினைச் சிறப்பித்தும், சித்திரைப்புத்தாண்டை சிறப்பித்தும் இவ்விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

காலை மரதன் ஓட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியினைத் தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்களுக்கான சுவாரசியமான போட்டிகள் பலவும் இடம்பெற்றன.


துளி அருவி அமைப்பின் தலைவர் பொ.திஜாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.











கருத்துகள் இல்லை