Header Ads

முனைக்காடு கிராமத்தில் இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட, முனைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட இரு கொங்கிறீட் வீதிகள் மக்கள் பாவனைக்காக இன்று(12) திறந்து வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின், கம்பரெலிய அபிவிருத்தி திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், ஒருவீதி ரூபா 20இலட்சம் பெறுமதியில், மொத்தமாக 40இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இரு வீதிகளே மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சீ.புஸ்பலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இவ்வீதியினை திறந்து வைத்தனர்.










கருத்துகள் இல்லை